பிரியாணி சாப்பிட இத்தனை ஆயிரமா? பிரியாணி பிரியர்களை கேள்வியால் அசிங்கப்படுத்திய கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் கோபிநாத் பிரியாணிக்கு பல ஆயிரங்களை செலவு செய்யும் மக்களை சரமாரியாக கேள்வி கேட்டு அசிங்கப்படுத்தியுள்ளார்.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு பிரியாணி விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
ஒரு மாதத்திற்கு பிரியாணிக்கு மட்டும் 3000 ரூபாய் செலவு செய்யும் நபர்களை பார்த்து கோபிநாத் மெய்சிலிர்த்துள்ளார்.
மேலும் செம்மறி ஆடு, வெள்ளாடு இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் அரங்கத்தில் அமர்ந்திருந்த பிரியாணி பிரியர்களை கோபிநாத் கேள்வி கேட்டு அசிங்கப்படுத்தியுள்ளார்.