அறந்தாங்கி நிஷா வாழ்வில் ஏற்பட்ட விரிசல்! நீயா நானா கோபிநாத்தால் வெளியான உண்மை
நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் மூலம் இன்று வெளியான ப்ரொமோ காட்சியால் அறந்தாங்கி நிஷா வாழ்வில் ஏற்பட்ட விரிசல் தற்போது வெளிச்சமாகி உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் பெண் பிரபலங்களாக இருக்கும் பிரபலங்களும், அவர்களின் கணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அறந்தாங்கி நிஷா வாழ்வில் சிக்கல்
இதில் அனிதா தனது கணவருடன் கலந்து கொண்டதுடன், அறந்தாங்கி நிஷாவும் தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். வெளியில் தான் இருக்கும் இடத்தினை கலகலப்பாக வைத்திருக்கும் நிஷாவின் வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
கணவர் கூறும் உண்மையையும், சூழ்நிலையையும் பொறுத்துக்கொள்ள முடியாத நிஷா கண்கலங்கி கண்ணீர் சிந்தியுள்ளார்.