இனி தீபாவளி கொண்டாடாதீங்க.. அரங்கத்தில் ஆவேசமாக பேசிய கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் வரவு எட்டணா செலவு பத்தணா என்ன காரணம்? என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு வரவு எட்டணா செலவு பத்தணா என்ன காரணம்? என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் கலந்து கொண்டுள்ள நடுத்தர மக்களின் வாழ்க்கை செலவு அளவுக்கு அதிகமாக செல்கின்றது. இதற்கு மற்றொரு வேலையையும் சேர்த்து செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
மாதம் 20 ஆயிரம் சம்பளம் வாங்கும் நபர் தனது பட்ஜெட்டை போட்டு காண்பித்த நிலையில், அவருக்கு 4 ஆயிரம் ரூபாய் கூடுதலாக தேவைப்படுகின்றது. இதற்காக எதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நபர், பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள பல விடயங்களை வேண்டாம் என்று எடுத்த நிலையில், கோபிநாத் கடுப்பாகி இனிமேல் நீங்கள் கோவிலுக்கு செல்லாதீர்கள்... தீபாவளி கொண்டாடாதீர்கள் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |