டைனோசரை தவிர அனைத்தையும் சாப்பிடும் பெண்! நீயா நானாவில் கொந்தளித்த கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் பெண் ஒருவரை டைனோசரை தவிர அனைத்தையும் சாப்பிடும் குடும்பம் என்று கோபத்தில் கொந்தளித்துள்ள சம்பவம் இந்த வார ப்ரொமோ காட்சியாக வெளியாகியுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் சைவம் சாப்பிடும் ஆண்கள் மற்றும் அசைவம் சாப்பிடும் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
டைனோசரை தவிர அனைத்தும் சாப்பிடும் பெண்
குறித்த ப்ரொமோ காட்சியில் சைவம் சாப்பிடும் ஆண்களின் பரிதாபநிலை தெரியவந்துள்ளது. ஆனால் பெண்களோ தனக்கு பிடித்த அத்தனை அசைவ உணவுகளையும் சமைத்து சாப்பிடும் நிலையில், ஆண்களுக்கு பிடித்த சைவ உணவுகளை தனக்கு பிடிக்காது என்ற காரணத்தினால் சமைத்து கொடுக்காமல் இருப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது.
இதில் ஒரு கட்டத்தில் பெண் ஒருவர் கூறியதைக் கேட்ட கோபிநாத் டைனோசரை தவிர மற்ற எல்லாம் சாப்பிடும் குடும்பம் என்று குறித்த பெண்ணை கிண்டல் செய்துள்ளார்.