இப்போ சண்டை போட சொல்லுங்க! தாயை சண்டைக்கு கூப்பி்ட்ட மகன்: பேசமுடியாமல் நின்ற கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் மாமியார் மருமகள் இடையே மகன் சண்டை இழுத்துவிடும் நிகழ்வு நடைபெறுவதாக இந்த வாரம் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. மாமியார் மருமகள் இடையே மகன் சண்டை இழுத்து விடும் மகன் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
சண்டை போட அழைத்த மகன்
இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் மாமியார் மருமகள் ஒற்றுமையாக இருந்தாலும் மகன் ஏதாவது ஒரு ரூபத்தில் பேச்சு கொடுத்து இருவருக்கும் சண்டையிழுத்து விடுவதாக விவாதம் ஆரம்பித்துள்ளது.
இதில், தனது தாய் மற்றும் மனைவியை மகன் ஒருவன் இப்போ சண்டை போட சொல்லுங்க சார் என்று கோபிநாத்திடம் கூறியுள்ளார்.