இப்படியும் ஒரு பாசமா? கலாச்சாரங்களை தகர்த்தெறிந்த அக்கா - தங்கை
ஏ பொண்ணு விஷேசத்திற்கு ஏ அக்கா வராமல் ஒதுங்கி நின்று விட்டார். இந்த செயல் எனக்கு மிகுந்த வறுத்தத்தை கொடுத்தது என நீயா நானாவில் பெண்ணொருவர் பேசியது கண்கலங்க வைத்துள்ளது.
நீயா நானா..
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் இந்த நீயா நானா.
இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
தொடர்ந்து இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
அக்கா - தங்கை விவாதம்
இந்த நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் அக்கா - தங்கை இருவருக்கும் இடையிலுள்ள மனக் குறைகள் விவாதமாக இடம்பெற்று வருகின்றது.
அதில், "என்னுடைய அக்கா என்னுடைய பொண்ணு விஷேசத்திற்கு மாப்பிள்ளை என்ற காரணத்தினால் வரவில்லை. இந்த விடயம் என்னை மிகவும் பாதித்தது. மேலும் அந்த இடத்தில் ஏ அம்மாவாக என்னை பார்த்து கொள்ள வேண்டிய இவரே என்னை மதிக்கவில்லையென்றால் எப்படி சார்!” என கோபிநாத்திடம் பெண்ணொருவர் கருத்தை முன் வைத்துள்ளார்.
அதற்கு,“ என்னை அந்த இடத்தில் யாராவது விலகிக் கொள் என்று கூறினால் என் மனம் உடைந்து இந்த காரணத்தினால் நான் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.” என கண்கலங்கிய படி கூறினார்.
இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
இதனை பார்த்த தொகுப்பாளர் கோபிநாத்,“ இது போன்ற நேரங்களில் தான் உங்களின் உரிமைகளை எடுத்து கொள்ள வேண்டும். ” எனக் கூறியுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.