இதுவும் ஒரு விதத்தில் பாதிப்பு தானே.. நீயா நானாவில் உடைக்கப்பட்ட உண்மை!
திருமணம் என்ற வார்த்தை தான் தன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இல்லாமால் ஆக்கியது என நீயா நானாவில் பெண்ணொருவர் கூறியுள்ளார்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் இந்த நீயா நானா.
இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.
பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
தொடர்ந்து இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
நீயா நானாவில் உடைக்கப்பட்ட உண்மை
இந்த நிலையில் இந்த வாரம் நீயா நானாவில் திருமணமே வேண்டாம் என சொல்லும் பெண்கள் ஒரு பக்கமும், திருமணத்திற்கு பெண்கள் தேடும் ஆண்கள் ஒரு பக்கமும் விவாதித்து வருகின்றனர்.
அதில், கலந்து கொண்ட விவாதியொருவர், “ நான் சிறு வயது இருக்கும் போதே திருமணம் செய்து கொள்ளுமாறு என்னை சுற்றியுள்ளவர்கள் கூறினார்கள்.
இதனால் என்னால் பிளஸ் 2 கூட சரியா படிக்க முடியவில்லை.
திருமணத்திற்கு பின்னர் என்னோட பிடிவாதத்தினால் தான் நான் கல்லுாரி படிப்பை முடித்தேன்.
எனக்கு மட்டும் திருமணமாகாமல் இருந்தால் கண்டிப்பாக நான் தற்போது ஒரு வைத்தியர் ஆகிருப்பேன்.” என தன்னுடைய வாழ்க்கையில் நடந்தவைகளை உருக்கமாக கூறியிருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “சிறுவயதில் குழந்தை திருமணம் வேண்டாம்” என தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.