நடத்தை தான் நீ யாரென்று தீர்மானிக்குமா? நீயா நானாவில் காரசார வாதம்
ஒருவரின் நடத்தை தான் அவரை யாரென்று தீர்மானிக்கும் என நீயா நானாவில் விவாதியொருவர் கூறிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சி மற்றைய நிகழ்ச்சியை போல் அல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை விவாதம் போல் பேசி அதற்கு ஒரு தீர்வு காண்பது தான் இந்த நீயா நானாவின் முக்கியம்சமாக இருக்கின்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் இந்த நிகழ்ச்சிக்கான ரசிகர்களும் அதிகம் இருக்கின்றார்கள்.
நிர்வாகத்தில் பெண்களின் அதிகாரம்
இந்த நிலையில் ஒரு நிறுவனத்தில் தலைமை அதிகாரத்தில் இருக்கும் பெண்களுக்கு எவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றது என விவாதிக்கப்பட்டுள்ளது.
அதில், தொகுப்பாளர் இடையில் ஒரு கருத்தை ஆணித்தனமாக கூறுகிறார்கள். என்னவென்றால், “அதிகாரத்தில் இருக்கும் பெண்களுக்கு அதிகாரம் இருக்கலாம். அது திமிரு அல்ல ஆணவம் என்ற பார்வை இருக்கிறது” என கூறுகிறார்.
இதனை பார்த்த இணையவாசிகள்,“அதிகாரத்தின் கரம் ஓங்கும் பொழுது, ஆணவத்தின் குரல் எட்டி பார்ப்பது வழமை தானே ” என தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.