விவாகரத்தான பெண்களிடம் கோபிநாத் கேட்ட கேள்வி: கண்ணீருடன் வந்த பதில்
விவாகரத்தான பெண்களிடம் கோபிநாத் கண்ணீர் வரும்படி ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.
பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது.
விவாகரத்தான பெண்கள் கொடுத்த பதில்
இந்த நிலையில் இந்த வாரம் விவாகரத்தான பெண்கள் மற்றும் சமூகம் என இரு தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் விவாகரத்தான பெண்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது? என்ற கேள்வியை சமூகம் தரப்பினரை பார்த்து கோபிநாத் கேட்டுள்ளார்.
இதற்கு, “விவாகரத்தான பெண்ணை இந்த சமூகத்தினர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அத்துடன் குடும்பத்தில் ஒரு விளக்கு கூட ஏற்ற அனுமதியில்லை.” என்றனர்.
இதனை தொடர்ந்து “ விவாகரத்திற்கு பின்னர் நீங்கள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கவில்லை அப்படி ஏதாவது இருந்தால் கூறுங்கள்?” அதற்கு விவாகரத்தான பெண்கள்,“ மரியாதை, குழந்தைகளிடமிருந்து கிடைக்கும் அன்பு, பெண்களுக்கான இடம்...” என கண்ணீருடன் பல பதில்களை கலந்து கொண்டவர்கள் கொடுத்தனர்.
இப்படியாக இந்த வாரத்திற்கான நீயா நானா ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |