சொறி சிரங்குகளை ஆட்டிப் படைக்கும் வேம்பு! நசுக்கி தண்ணீரில் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
பொதுவாக மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்களில் மிகவும் கசப்பானது வேப்பிலை தான்.
இது எவ்வளவு கசப்பாக இருக்கின்றதோ அந்தளவு வேப்பிலைக்கு நோய்களை குணமாக்கும் ஆற்றல் இருக்கின்றது.
வேப்பிலை சாற்றை உட்கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் மெல்ல மெல்ல பழகிக்கொண்டால், அது நீரிழிவு நோயை வேரறுக்கும். என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
ஒரு டம்பளர் தண்ணீரில் 2 முதல் 3 இலைகளைச் சேர்த்து அரைத்து, அதிலிருந்து கிடைக்கும் சாற்றை குடித்து வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன.
அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
வேம்பை நசுக்கி தண்ணீரில் சேர்த்து குடித்தால் என்ன நடக்கும்?
1. காலையில் தினமும் வேம்பு சாற்றை குடிப்பதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வருவதுடன் இது போன்ற வேறு நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
2. சரும பிரச்சினைகள் சில பக்ரீயாக்கள் பிரச்சினையால் தான் ஏற்படுகின்றது. இதனால் வேம்பு சாற்றை பருகுவதால் உடலிலுள்ள பக்ரீயாக்கள் இல்லாமலாக்கப்படுகின்றது.
3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் வேப்பிலைக்கு இருக்கின்றன. வேப்பிலையை உரலில் லேசாக நசுக்கி அதனை தண்ணீரால் கொதிக்க விட்டு அதனை குடித்து வந்தால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
4. மஞ்சளுடன் வேப்ப இலைகளை சேர்த்து அரைத்து, அந்த பேஸ்டை சருமத்தில் பூசினால், அரிக்கும் தோலழற்சி, வளைய புழுக்கள் ஆகிய நோய்கள் குணமாகும்.
5. பொடுகு மற்றும் பேன் பிரச்சினையிருப்பவர்கள் வேப்பிலையை அரைத்து குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பயன்படுத்தி வந்தால் காலப்போக்கில் இவையணைத்தும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |