தினமும் 2 வேப்பிலை மென்று சாப்பிட்டால் என்ன நடக்கும்?
பொதுவாக அந்த காலம் தொட்டு இன்று வரை வேப்பிலை மருத்துவத்திற்கு பயன்படுத்தும் தாவரமாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் வேப்பிலையை கொண்டு நம் உடலிலுள்ள பக்ரீயாக்களை விரட்டியடிக்கலாம்.
அத்துடன் தலையில் அல்லது உடம்பில் ஏதாவது தொற்றுகள் இருந்தாலும் வேப்பிலையை அரைத்து தடவலாம்.
இது போன்ற மருத்துவ குறிப்புக்களை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வேப்பிலையால் கிடைக்கும் நன்மைகள்
Image - ParentCircle
1. காய்ச்சல், மலேரியா போன்ற தொல்லை தரும் நோய்களில் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துக்களை எடுப்பதுடன் வேப்பிலையையும் எடுத்து கொள்ளலாம். அத்துடன் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களும் இல்லாமலாகும்.
2. சர்க்கரை நோயுள்ளவர்கள் தினமும் காலையில் இரண்டு வேப்பம் இலைகள் சாப்பிட்டால் சர்க்கரையின் மூலக்கூறுகளை அகற்றி அதன் அளவு அதிகரிப்பது குறையும்.
3 . சிலருக்கு பற்கள் சரியான பராமரிப்புயின்மையால் பூச்சிகள், பங்கசுகள் படிந்திருக்கும். இது போன்ற பிரச்சினையுள்ளவர்கள் காலையில் தினமும் வேப்பம் பொடி அல்லது வேப்பம் குச்சி கொண்டு பல் துலக்கினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
4. கண்களில் எரிச்சல், சோர்வு மற்றும் சிவத்தல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் வேப்பிலையை பயன்படுத்தலாம். ஏனெனின் கண் பார்வையை மேம்படுத்தவும் பார்வை நரம்புகளை ஊக்கப்படுத்துகின்றது.
5. உடம்பில் சொரி அல்லது தலையில் பொடுகு பிரச்சினையிருந்தால் பயமின்றி வேப்பிலையை நன்றாக அரைத்து மருந்தாக பயன்படுத்துங்கள். இரண்டு வாரங்களில் நல்ல பயன் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |