மஞ்சள் பற்கள் வெண்மையாய் மாற வேண்டுமா...அப்போ இதை பண்ணுங்க
ஒருவரின் அழகை பிரதிபலிப்பதில் சிரிப்பு மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
அந்த வகையில் நாம் சிரிக்கும் பொழுது நமது பற்கள் வெண்மையாக இருக்கவேண்டியது மிகவும் முக்கியம்.
ஒரு சிலருக்கு தங்கள் பற்கள் மஞ்சளாக இருப்பது பெரிதும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றது. சரி இனி இந்த மஞ்சள் பற்களிலிருந்து எவ்வாறு விடுபடலாம் எனப் பார்ப்போம்...
image - wikipedia
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை பற்கள் மற்றும் ஈறுகளில் ஐந்து நிமிடங்களாவது மென்மையாக தேய்க்க வேண்டும். இது மஞ்சள் கரையைப் போக்கி, பற்சொத்தையையும் தடுக்க உதவுகிறது.
image - Food navigater
உப்பு மற்றும் கடுகு எண்ணெய்
உப்பானது பற்களில் படிந்துள்ள கறையை போக்கவல்லது. அதேசமயம் கடுகு எண்ணெய் பக்டீரியாக்களை எதிர்க்கும் பண்பு கொண்டது. எனவே இவை இரண்டையும் கலந்து பற்களில் தேய்த்து பின்னர் கொப்பளிக்கும்போது பற்கள் வெண்மையாகும்.
image - The old farmers almanac
எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா
சிறிதளவு பேக்கிங் சோடாவில் ஓரிரு துளிகள் எலுமிச்சை சாறு விட்டு நன்றாக குழைத்து பேஸ்ட் போல் செய்து பற்களில் மெதுவாக தேய்க்க வேண்டும். ஆனால், பேக்கிங் சோடாவை அதிகப்படியாக பயன்படுத்தக் கூடாது.
image - prevention.com
அப்பிள் சைடர் வினிகர்
டூத் பிரஷ்ஷை அப்பிள் சைடர் வினிகரில் முக்கி பற்களில் தேய்த்து பின்னர் வாய் கொப்பளிக்க வேண்டும்.