Madras Eye வந்தால் மூளையில் பாதிப்பு ஏற்படுமா? மருத்துவரின் விளக்கம்
கண்ணையும் இமையையும் இணைக்கும் பகுதியில் ஏற்படும் தொற்றை Madras Eye என அழைக்கிறோம்.
மிக எளிதாக காற்றின் வாயிலாக இத்தொற்று பரவுவதால் மற்றவர்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
Madras Eye என பெயர் வந்தது ஏன்?
அடினோ வைரஸ் தொற்றால் கண் இமை மற்றும் கண் மேற்பரப்பு வீங்கி சிவப்பு நிறமாக மாறுகிறது.
இந்த தொற்று முதன்முதலில் 1918ம் ஆண்டு மெட்ராஸில் கண்டறியப்பட்டதால் Madras Eye என பெயர் வந்தது.
நோயின் அறிகுறிகள்
- கண்கள் சிவந்து காணப்படும்.
- கண்களில் அடிக்கடி நீர் சுரந்து கொண்டு இருக்கும்.
- தொற்று காணப்படும் போது கண்களில் எரிச்சல் ஏற்படும்.
- வெளிச்சத்தை பார்க்க முடியாது
- கண்களிலிருக்கும் அழுக்குகள் வெளியேறும் போது அது இமைகளில் தங்கிக் கொள்கிறது.
image - kyonntra/Getty
Madras Eye நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
இந்நோய் தொற்று ஏற்பட்டவர்கள் நீண்ட நேரத்திற்கு டிஷ்யூ பேப்பர் மற்றும் கைக்குட்டை பயன்படுத்தக் கூடாது.
“Madras Eye” தொற்றாளரின் கான்டாக்ட் லென்ஸ்களை போன்ற கண்களுக்கு பயன்படுத்தும் பொருட்களை மீண்டும் பாவனைக்கு எடுக்கக்கூடாது.
கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக இருக்க வேண்டும் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை தொற்றாளர்கள் பின்பற்றுவது சிறந்தது.
தொற்றாளர்களுக்கு அடிக்கடி கண்களில் திரவம் சுரக்கும், இது சரியாகும் வரை வெளி பயணங்களை குறைப்பது நல்லது. இது போன்று செய்யும் போது நோயின் பாதிப்பை குறைக்க முடியும்.
image- iStock
Madras Eye நோயாளர்களின் தலையணை உறை, ஒப்பனை பொருட்கள், துண்டு போன்ற பொருட்களை பயன்படுத்த கூடாது.
கண்களில் சிவப்பு போன்று காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.
வீட்டு வைத்தியம் செய்ய செய்யக்கூடாது, மிக முக்கியமாக நோயில் பாதிக்கப்பட்டவர்கள் வெளியிலிருக்கும் மருந்தகங்களில் மருந்துக்களை எடுப்பதை தடுக்க வேண்டும்.