10 வயது வித்தியாசத்தில் திருமணம்! பறிபோன சொத்துக்கள்... வெளியான நடிகை நீலிமாவின் உண்மைகள்
பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா தனது வாழ்வில் கடந்து வந்த கஷ்டங்களை சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகை நீலிமா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்து பிரபலமானவர் தான் நீலிமா.
இவர் கமல் ஹாசன் - சிவாஜி கணேசன் இணைந்து நடித்த, தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின்பு கார்த்தியின் நான் மகான் அல்ல, ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம், ஜோதிகாவின் மொழி, ராகவா லாரன்ஸின் ராஜாதி ராஜா போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது அதிகமான சினிமா தொடங்களில் நடித்து வரும் இவர் கடந்து வந்த பாதையும், தற்போது சம்யுக்தா பிரச்சினையும் ஆர்.ஜே.ஷா பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
10 வயது வித்தியாசத்தில் திருமணம்
பின்பு நடிகை நீலிமா தெலுங்கில் நடிக்க இருந்த சீரியலை கைவிட்டார். அப்பொழுது இயக்குனர் இசைவாணன் நீலிமாவின் வாழ்க்கைக்கு வந்துள்ளார்.
தன்னால் தான் நீலிமா தெலுங்கு சீரியலில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த இவருக்கும், நீலிமாவிற்கும் நட்பு ஏற்பட்டது.
நீலிமாவிற்கு 19 வயது... இசைவாணனுக்கு 29 வயது... இரண்டு ஆண்டுகளில் இவர்களின் நட்பு காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2008ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.
நீலிமாவிற்கு 10ம் வகுப்பு படிக்கும் தம்பி ஒருவர் உள்ள நிலையில், அவரது தந்தை இவர்களது திருமணம் முடிந்த 6 மாதங்களில் உயிரிழந்தார். தம்பி படித்து முடித்து வேலைக்கு சென்ற பின்பு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்த நீலிமா இதனை தனது கணவரிடமும் கூறி சம்மதம் வாங்கியுள்ளார்.
பின்பு தம்பி படித்து முடித்த பின்னே இந்த தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொண்டனர்.
முதுகில் குத்திய நண்பர்கள்
இந்நிலையில் நீலிமா தம்பதிகள் கடந்த 2011ம் ஆண்டு படம் ஒன்றினை தயாரிக்க முடிவு செய்து, நியூசிலாந்து, ஃபிஜீ தீவில் 55 நாள் படப்பிடிப்பிற்கு இங்கிருந்து 55 பேரை அழைத்துச் சென்று சுமார் 4.50 கோடி ரூபாய் செலவு செய்தனர்.
ஆனால் ஒரு சில நண்பர்கள் முதுகில் குது்தியதால் இப்படத்தினை இவர்களால் வெளியிட முடியாமல், கையில் வைத்திருந்த 4.50 கோடி பணம், வீடு எல்லாம் பறிபோனது. நீலிமாவின் தாலி செயின் மட்டுமே மிஞ்சியுள்ளது.
வாடகைக்கு கூட வீடு எடுக்க முடியாத நிலையில், இசைவாணனின் நண்பர் வீட்டில் தங்கியுள்ளனர். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதிக்க ஆரம்பித்து, வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இறுதியில் அந்த வீட்டையே வாங்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட இந்த தம்பதிகள் 4 ஆண்டுகள் கஷ்டப்பட்டு தற்போது முன்னுக்கு வந்துள்ளனர். நீலிமாவையும் கணவர் புரிந்து வைத்துள்ள நிலையில், நீலிமாவும் கணவரை புரிந்து வைத்துள்ளது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 வது வித்தியாசம் திருமணத்தில், 15 ஆண்டு கால திருமண வாழ்க்கை, 16 பேர் கொண்ட பெரிய குடும்பம் இவ்வாறு இருந்தும் இவர்களின் புரிதல் வேற லெவலாக இருந்து வருகின்றது.
சமீபத்தில் கூட நீலிமாவின் கணவரை தாத்தா என்று பலரும் கூறிவந்த நிலையில், இதற்கு நீலிமா கூலாக பதில் அளித்தார். தனது கணவருக்கு டை அடிப்பது பிடிக்கவில்லை... சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை தான் தனது குழந்தைகளும் விரும்புவதாகவும், சோசியல் மீடியாவிற்காக அவர் மாற்றிக்கொள்ள அவசியமில்லை என்று கூறியிருந்தார்.
இவர்களின் வாழ்க்கை கதையினை கூறிய ஆர்.ஜே.ஷா இது தான் உண்மையான காதல்.... ஆனால் தற்போது 20 வயதில் திருமணம் செய்துகொண்டு வெறும் 15 நாட்களில் சோசியல் மீடியா வரை வரும் காதல் உண்மையானது அல்ல என்று கூறியுள்ளார்.