நா அப்பாவ பார்த்ததே இல்ல.. ஏ அம்மா ரொம்ப பாவம்: மனம் திறந்த NEEK பட நாயகி
“நா அப்பாவ பார்த்ததே இல்ல.. ஏ அம்மா ரொம்ப பாவம்..” என NEEK பட நாயகி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
NEEK திரைப்பட நாயகி
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தான் தனுஷ்.
இவர், நடிப்பை தாண்டி தற்போது படம் தயாரிக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் (NEEK) என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரளவு வரவேற்பை பெற்று ஒரு மாதமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
NEEK திரைப்படத்தில், தனுஷ் அவருடைய அக்கா மகன் பவிஷை அறிமுகம் செய்துள்ளார். அவருடன் இன்னும் சில இளம் நடிகர்கள் அறிமுகமாகியுள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை ரம்யா ரெங்கநாதன்.
ஏ அப்பாவ பார்த்ததே இல்லை..
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா ரெங்கநாதன், பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டிக் கொடுத்துள்ளார். அதில்,“ என்னுடைய அப்பா பிறந்தது 1 மாதத்தில் இறந்து விட்டார். என்னுடைய அம்மா என்னை பல கஷ்டங்களுக்கு மத்தியில் தான் வளர்த்தார்.
என்னுடைய அம்மா இல்லையென்றால் எனக்கு இப்படியொரு அங்கிகாரம் கிடைத்திருக்காது. எனக்கு எல்லாமே என்னுடைய அம்மா தான். என்னுடைய அப்பாவை நான் பார்த்து கூட கிடையாது. அவரை நான் பார்த்திருக்கவில்லையென்றாலும் அவர் ஒரு நல்ல மனிதர் என்று நினைக்கிறேன். என்னுடைய அம்மா என்னை உனக்காக படி என அடிக்கடி கூறுவார்..” என மனம் விட்டு பேசியிருக்கிறார்.
“இவ்வளவு அழகாக இருக்கும் ரம்யாவின் மறுப்பக்கம் இவ்வளவு சோகமாக இருக்கிறதா?” என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |