மணிமேகலையின் ஆசை நிறைவேற்றிய சேனல்- ஆனந்தத்தில் அந்தரத்தில் பறந்த தருணம்
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் மணிமேகலையின் ஆசையை சேனல் நிறைவேற்றியுள்ளது.
Vj மணிமேகலை
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்தவர் தான் மணிமேகலை.
இதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சிக் கண்டு பிரபல தொலைக்காட்சியில் டாப் நிகழ்ச்சிகளின் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்தார்.
இதனை தொடர்ந்து கோமாளியிலிருந்து விலகி, அதே நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்தார். அப்போது குக்காக வந்த பிரியங்காவுடன் ஏற்பட்ட வாக்குவாதங்கள் காரணமாக பாதி நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
அதன் பின்னர், தற்போது ஜு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் விஜய்யுடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இப்படி ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் அவரது சமூக வலைத்தளங்களிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
மணிமேகலைக்கு வந்த ஆசை
இந்த நிலையில், டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வரும் மணிமேகலைக்கு திடீர் என ஒரு ஆசை வந்துள்ளது.
அதாவது, போட்டியாளர்களை அந்தரத்தில் பறக்க வைப்பது போன்று, தொகுப்பாளர்களையும் அப்படி அந்தரத்தில் பறக்க வைத்தால் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார். இதனால் நடுவர்களின் அனுமதியுடன் மணிமேகலையையும், விஜய்யையும் அந்தரத்தில் பறக்க வைத்துள்ளனர்.
அப்போது, விஜய் பயத்தில் கத்த ஆரம்பித்துள்ளார். இதனால் அங்கிருந்த அணைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
“ஒரு வழியாக நிகழ்ச்சியை மணிமேகலை கலகலப்பாக நடத்தி வருகிறார்..” என நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |