இளம் வயதிலேயே கழுத்து வயதான தோற்றத்தில் இருக்கிறதா? சுருக்கங்கள், கோடுகளை போக்குவது எப்படி?
உங்கள் முகத்தை கழுவும்போது, உங்கள் கழுத்தையும் சேர்த்து சுத்தப்படுத்துதல் அவசியம்.
முகத்தை எந்தஅளவிற்கு கவனிப்பீர்களோ அதேபோல் கழுத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அப்பொழுதுதான் அழுக்கு மற்றும் தூசு போன்றவை படியாமல் இருக்க செய்யும். உங்கள் வயது என்ன? என யாராவது நம்மை கேட்டுவிட்டால் சட்டென்று நம் கை செல்லும் இடம் கலுத்துப்பகுதிதான்.

எதை வைத்தாவது கழுத்தை மறைக்க முயற்சி செய்வோம்.
ஆனால் இந்த சருமச் சுருக்கங்களுக்கான காரணங்களையும் அதை இயற்கையாக எப்படி சரிசெய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு செய்தால் மட்டும் தான் நிரந்தரமாக இந்த பிரச்சினை சரியாகும்.
எலுமிச்சைச் சாறு
எலுமிச்சைச் சாற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது இறந்த சரும செல்களை அழித்து வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. 2 முதல் 3 டீஸ்பூன் எலுமிச்சைச்சாற்றை கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரினால் கழுவிட வேண்டும்.
அன்னாச்சிப் பழ ஜூஸ்
அன்னாச்சிப் பழத்தில் என்சைம்கள் இருக்கின்றது. இது சருமத்தை பொழிவாக்கி, இறந்த சரும செல்களை எளிமையாக அழித்துவிடுகிறது.
சிறிது அன்னாச்சிப் பழ ஜூஸ் எடுத்து கழுத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவிலாம். இல்லையென்றால், சிறிது அன்னாச்சிப் பழத்தை எடுத்து கழுத்தில் தடவினாலும் அதுவும் சுருக்கத்தைப் போக்கும்.
கேரட்
கழுத்து சுருக்கத்தை தடுக்கும் கொலாஜனை கேரட் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
அதில் 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதனை கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவிடலாம்.