இந்தியாவில் அடுத்த மாதம் வெளியாகும் பப்ஜி- மேப்பில் புதிய மாற்றம்!
இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமினை உருவாக்கி வரும் கிராப்டான் புது கேமிற்கான புது டீசரை வெளியிட்டு இருக்கிறது.
டீசரில் இந்த கேம் எராங்கிள் (Erangle) மேப் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும், டீசரில் இன்-கேம் மேப்களுக்கான போஸ்ட்கார்டுகள் மற்றும் தேநீர் கோப்பைகள் இடம்பெற்று இருக்கின்றன.
இவற்றில் ஒரு போஸ்ட்கார்டு எராங்கிள் எனும் பெயர் கொண்டிருக்கிறது. பப்ஜி மொபைல் கேமிலும் எராங்கில் (Erangel) எனும் மேப் வழங்கப்பட்டு இருக்கிறது.
இது அந்த கேமில் பிரபல மேப்-ஆக உள்ளது. இதையடுத்து, பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம்பிளே பப்ஜி மொபைல் கேம்பிளே போன்றே இருக்கும் என தெரிகிறது.
முன்னதாக புதிய கேம் இந்தியா சார்ந்த சில அம்சங்களை கொண்டிருக்கும் என கிராப்டான் தெரிவித்து இருந்தது. அந்த வகையில், இந்த கேமில் மேப் பெயர்கள் மட்டும் சற்றே வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது.
புதிய பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமிற்கான முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோரில் மே 18 ஆம் தேதி துவங்கியது.