பயங்கர ரொமான்ஸில் நயன்- விக்கி! புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நெட்பிளிக்ஸ்!
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த மாதம் 9 ம் தேதி தனியார் நட்சத்திர விடுதியில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தின்போது, வீடியோவாக பதிவு செய்து அதை தனது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட திட்டமிட்டு ஒப்பந்தம் செய்தது அந்நிறுவனம்.
இதற்காக திருமண செலவை ஏற்றுக்கொண்டது மட்டும் அல்லாமல் நயன்தாராவுக்கு சுமார் ரூ.25 கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளது அந்நிறுவனம்.

ஆனால், ஒப்பந்தத்தை மீறி விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டதால், ஒளிப்பரப்ப மாட்டோம் பணத்தை திரும்ப தரவேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியானது.
முதல் சீசன் வெளியீடு
இந்நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு முதல் சீசனாக விரைவில் வெளியாகும் என கூறியுள்ளனர். அதில், திருமணம் மற்றும் திருமணம் சார்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.

அதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து அடுத்த சீசன்கள் வெளியாக வாய்ப்புள்ளது. அதில் நயன்தாராவின் வாழ்க்கை பயணம் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.
அதற்கான படப்பிடிப்பை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடத்தி வருகிறாராம்.
These images of Nayanthara and Vignesh have us seeing stars ?✨
— Netflix India (@NetflixIndia) July 21, 2022
BRB, we're doing a little happy dance ourselves because THEY’RE coming to Netflix??it’s beyond a fairy tale!! pic.twitter.com/14poQwNAZv