தொடர் சர்ச்சையில் நயன்- விக்கி ஜோடி? Netflix எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த மாதம் 9 ம் தேதி தனியார் நட்சத்திர விடுதியில் திருமணம் செய்து கொண்டனர்.
ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா. அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன் ,தலைமகன், ஈ, சிவாஜி, பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார்.
மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக வலம் வந்தவர் தான் இந்த நயன்தாரா.
காதலனை மணந்த நயன்தாரா
இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
சிவப்பு நிற உடையில் நடிகை நயன்தாராவும்,பொன்னிற ஆடையில் விக்னேஷ் சிவனும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் இருந்து வந்த 20 சிவாச்சாரியர்கள் வேதமத்திரங்கள் முழுங்க திருமணத்தை நடத்தி வைத்தனர்.
ஆடம்பரமாக செய்யப்பட்ட திருமணத்திற்கு கோடிக்கணக்கில் நயன்தாராவுக்கு செலவாகியிருக்கும் என்று பேசப்பட்டு வந்தது.
செலவழித்த நெட்பிளிக்ஸ்
இதனிடையே திருமண செலவு அனைத்தையும் நெட் பிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதாவது நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணத்தை வீடியோ பதிவு செய்து அதை தனது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட திட்டமிட்டு ஒப்பந்தம் செய்தது அந்நிறுவனம்.
இதற்காக திருமண செலவை ஏற்றுக்கொண்டது மட்டும் அல்லாமல் நயன்தாராவுக்கு சுமார் ரூ.25 கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளது அந்நிறுவனம்.
தற்போது திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருவதால், நெட்பிளிக்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், விரைவில் இருவரது காதல் கதை குறித்த ஆவணப்படத்தை வெளியிட நெட்பிளிக்ஸ் தீவிர ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.