கடல் நடுவே ஒய்யாரமாய் நயன்தாரா... போட்டோ எடுக்கிறவங்க படும் சிரமத்தை பாருங்க
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இரண்டாவது ஹனிமூனிற்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
நயன் விக்கி
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டுகள் காதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
பின்பு திருப்பதி கோவிலுக்கு சென்று சர்ச்சையில் சிக்கிய நிலையில், தொடர்ந்து தாய்லாந்துக்கு சென்று தனது ஹனிமூனைக் கொண்டாடினர்.
ஹனிமூன் முடிந்து இந்தியா திரும்பிய இந்த ஜோடிகள் தங்களது வேலையை முடித்துவிட்டு மீண்டும் வெளிநாடு சென்றுள்ளனர்.

கடலுக்கு நடுவே நயன்தாரா
இந்நிலையில் இருவரும் ஸ்பெயினில் பார்சிலோனாவில் கொண்டாட்டத்தில் உள்ள நிலையில் தங்களின் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறனர்.
தற்போது நயன்தாரா கடல் நடுவே போட் ரைடு செய்யும் புதிய வீடியோ, அனைவரும் சூரிய அஸ்தமனத்தில் ரிலாக்ஸ் செய்யும் ஒரு வினோத சடங்கு நிகழ்வு உட்பட பல வீடியோக்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
SUNSET CRUISE ?#IBIZA ⚡️#Photoshoot ? pic.twitter.com/fgYgfLbC1r
— Nayanthara✨ (@NayantharaU) August 27, 2022