நயன்தாராவுடன் விக்கி வெளியிட்ட புகைப்படம்! லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்
நடிகை நயன்தாராவை இறுக்கமாக கட்டிப் பிடித்தவாரு இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நயன் விக்கி தம்பதிகள்
நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இருவரது திருமணத்துக்கும் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இருவரது திருமணத்தின் போது பரிமாறப்பட்ட உணவுகள், நயன்தாரா அணிந்திருந்த உடை என அனைத்தும் செய்திகளானது.
திருமணத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், தனது தாய் வீட்டிற்கு சென்று வந்தார்.
தாய்லாந்தில் தேனிலவு
இருவரும் தாய்லாந்து நாட்டில் தங்கள் தேனிலவு நாட்களைக் கழித்து இந்தியா திரும்பிய நிலையில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன், நான் பிறந்த தினமே என்று பதிவிட்டுள்ளார்.