சத்தமில்லாமல் திருமண விருந்து வைக்கும் நயன்தாரா....இப்படி ஒரு நல்ல மனசா! நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டம்
நயன்தாராவின் திருமணம் இன்று மகாபாலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் எனும் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
ரசிகர்களுக்கு இந்த திருமணத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து வைக்க நயன்தாரா ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஷெரட்டன் பார்க்கில் இன்று நடைபெற உள்ள நயன்தாரா திருமணத்தில் குறிப்பிட்ட விஐபிக்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
ரசிகர்களுக்கு அனுமதி இல்லையே என்பதால் வருத்தம் அடைந்த ரசிகர்கள், தற்போது நயன்தாரா தமிழ்நாடு முழுவதும் உள்ள 18 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது திருமண நாள் அன்று மதிய விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளார் என்கிற தகவல் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
ட்ரெண்டாகும் நயன்
18 - 1+8 + 9 என்கிற கணக்கு வரும்படியாக தமிழ்நாடு முழுவதும் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று மதிய உணவிற்கான ஏற்பாடுகளை நயன்தாரா செய்துள்ளார் .
இதனால் ரசிகர்கள் #Nayanthara, #Nayantharawedding என ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வாழ்த்தி வருகின்றனர்.