சமையல் செய்யும் பெண்களை தாக்கும் நோய்கள்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
சமையலறையில் எழும்பும் புகையால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பெண்கள் காலை, இரவு கட்டாயம் சமையலறையில் உணவு சமைப்பதில் தான் நேரம் செலவிடுகின்றனர்.
சமையலறை சத்தங்களுக்கு பின்னால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு மறைந்திருக்கும் ஆபத்தும் உள்ளதாம்.
கணவன், பிள்ளைகளுக்காக சமையலறையில் தினமும் செலவிடும் நேரமும், அங்கு நிலவும் காற்றோட்டமின்மையும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
சமையலறையில் பெண்கள்
இந்திய பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்றரை மணி நேரம் சமையலறையில் செலவிடுகிறார்கள்.
போதிய வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லாததால், சமைக்கும்போது வெளியாகும் புகை மற்றும் வாயுக்கள் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கின்றன.
image: freepik
பாதுகாப்பற்ற சமையல் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 3.2 மில்லியன் பெண்கள் இறப்பதாகவும், இதய நோய், பக்கவாதம், சுவாச நோய்கள், நுரையீரல், புற்றுநோய் ஆகியவையும் அடங்குமாம்.
ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இவை மேலும் பிரச்சனையை ஏற்படுத்துமாம். விறகு அல்லது கரி அடுப்புகள் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம். மேலும் அதிக நேரம் நின்று சமைப்பது முதுகுவலி, குதிகால் வலியை ஏற்படுத்தும்.
என்ன செய்ய வேண்டும்?
சமைக்கும் போது கதவுகள், ஜன்னல்களை திறந்து வைப்பதுடன், குறுகிய நேரத்தில் சமையலை முடிக்கவும் செய்யவும்.
எக்ஸாஸ்ட் ஃபேன் மற்றும் சிம்னி பயன்படுத்தவும். மின்சார அல்லது இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்துவதன் மூலம் புகையை குறைக்கலாம்.
சமையலறையின் சுகாதாரமற்ற சூழல், பெண்கள் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு வழிவகுக்கின்றது.
image: pinterest
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
