நோ டயட் : நோ ஜிம்... 21 நாட்களில் 10 கிலோ உடல் எடையை குறைத்த மாதவன்! எப்படி?
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் மாதவன் ராக்கெட்டரி படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றி இருந்தார்.
அந்த எடையை மீண்டும் குறைக்க அவருக்கு 21 நாட்களில் மட்டும் ஆனதாக இவர் வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரலாகியது.
வெறும் 21 நாட்களில் தான் எப்படி உடல் எடையை குறைந்தார் என்பது குறித்து நடிகர் மாதவன் பேசும்போது, அதற்கு தனக்கு உதவிய விஷயத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜிம் செல்லாமல், அறுவை சிகிச்சை இல்லாமல், மருந்துகள் இல்லாமல், வெறும் 21 நாட்களில் அவர் எடை குறைத்து உடல் தகுதியை மேம்படுத்தியது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துமாதவன் பகிர்ந்த விடயங்களை முழுமையாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
உடல் எடையை குறைத்தது எப்படி?
உணவை நன்கு மென்று உண்ணுதல்
மாதவன் உணவை நன்கு மென்று உண்ணுவதை மாதவன் தனது உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தபோது அது வைரலானது. அவர் ஜிம், அறுவை சிகிச்சை அல்லது மருந்துகளை தவிர்த்து, வாழ்க்கை முறை மாற்றங்களை மட்டுமே பின்பற்றினார். இது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் போன்ற நிறுவனங்களின் ஆராய்ச்சிகளுடன் ஒத்துப்போகிறது, அங்கு சில மணிநேர உண்ணாமை அல்லது உணவு நேர கட்டுப்பாடு உடல் எடை குறைப்புக்கு உதவும் என கூறப்படுகிறது. மாதவன் இந்த முறையை பின்பற்றி, தனது உடலை இளமையாக வைத்திருக்கிறார். அவர் "பசியிருக்கும்போது மட்டும் உண்ணுங்கள்" என்ற கொள்கையை பின்பற்றுகிறார்.
காலை நீண்ட நடைப்பயணம்
தினமும் காலையில் நீண்ட தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதால், இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், கலோரிகள் எரிக்கவும் உதவுகிறது. காலையில் வெளிச்சத்தில் நடப்பது உடலின் இயற்கையான கடிகாரத்தை சரிசெய்து, சிறந்த தூக்கத்திற்கும் வழிவகுக்கும்.
நேரம் பிரித்து உண்ணும் முறை (Intermittent Fasting)
குறிப்பிட்ட நேர இடைவெளியில் மட்டுமே சாப்பிட்டு, மீதி நேரம் விரதம் இருப்பதாகும். இது உடலின் கொழுப்பை எரிக்க உதவுகிறது. மதியம் 3 மணிக்கு மேல் பச்சையான உணவுகளுக்கு பதிலாக (சாலட், பழங்கள் போன்றவை) சமைத்த உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.
இது செரிமானத்தை எளிதாக்கும் என்று நம்பப்படுகிறது. கடைசி உணவை இரவு 6:45 மணிக்குள் முடித்துக்கொண்டு, அதற்குப் பிறகு எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
அப்படி செய்வதால், உடல் குளுக்கோஸை எரித்து கொழுப்பைக் கரைக்கும் நிலையை அடைய உதவுகிறது. பச்சையான உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும் என்பதால், இரவில் அவை சிலருக்கு அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.
இரவில் மொபைல் இல்லை
மாதவன் தூங்குவதற்கு 90 நிமிடங்கள் முன்பு மொபைல், டிவியை தவிர்க்கிறார். இது தூக்க தரத்தை உயர்த்தி, உடல் எடை குறைப்புக்கு உதவும். மேலும் அதிகமாக தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இது நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்தை உதவும். நீரிழிவு, தோல் ஆரோக்கியத்துக்கும் இது நல்லது
மாதவன் சில ஆண்டுகளுக்கு முன்பு 'ராக்கெட்ரி: தி நம்பி விளைவு' என்ற படத்திற்காக உடல் எடையை அதிகரித்து இருந்தார்.
பின்னர், அந்த எடையை எந்தவித கடுமையான உடற்பயிற்சிகளும் இல்லாமல், மீண்டும் தனது பழைய உடல் அமைப்பிற்கு வர இந்த எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடித்து வெறும் 21 நாட்களில் குறைத்து அனைவரையும் திகைக்க வைத்தார். மாதவனின் இந்த அனுபவ பகிர்வு உடல் ஆரோக்கியத்துக்கு பெரிய முயற்சிகள் தேவையில்லை என்பதை காட்டுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
