70 வயதில் 4வது திருமணம்... தன்னை விட 29 வயது இளைய பெண்ணை திருமணம் செய்த நடிகர் யார்?
இந்த நடிகர் தனது 70-வது வயதில் 4வது திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவி 29 வயது இளையவர். பல்வேறு படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ளார்.
கபீர் பேடி
பாலிவுட் நடிகர் கபீர் பேடி. சினிமா துறையை தாண்டி அவரது திருமண வாழ்க்கை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1971-ல் பாலிவுட்டில் வெளியான 'ஹல்சல்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் கபீர் பேடி.
'மெயின் ஹூன் நா' போன்ற திரைப்படங்கள் மூலம் அங்கீகாரம் பெற்றார். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் கடந்த ஆண்டு வெளியான 'பெர்லின்' படம் வரை ஆக்டிவாக இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை சர்ச்சை நிரம்பியதாகவே அறியப்படுகிறது.
கடந்த 1969-ம் ஆண்டு கபீர் பேடி மாடல் மற்றும் நடன கலைஞரான பிரதிமா பேடியை திருமணம் செய்துகொண்டார். பிரதிமாவின் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அதனால் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
1970 க்குப் பிறகு, கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் கடந்த 1977 இல் விவாகரத்து செய்தனர். இந்த தம்பதிக்கு பூஜா மற்றும் சித்தார்த் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சித்தார்த் 1977 இல் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது மகனின் மரணம் பிரதிமாவை மன அழுத்தத்திற்கு தள்ளியது.
பிரதிமா குப்தாவுடன் வாழ்ந்தபோது, கபீர் 1970 வாக்கில் பர்வீன் பாபியுடன் உறவில் இருந்தார். ஆனால் அவரை திருமணம் செய்யவில்லை. பர்வீனும் கபீரும் 1977 இல் பிரிந்தனர். அமெரிக்காவில் மாடலிங் செய்தபோது கபீர் பேடி, சூசன் ஹம்ப்ரீஸை சந்தித்தார். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது, அவர்கள் 1980 இல் திருமணம் செய்து 1990 இல் பிரிந்தனர். இந்த தம்பதிக்கு ஆடம் பேடி என்ற மகன் உள்ளார்.
1991 இல், கபீர், பிபிசி வானொலி தொகுப்பாளர் நிக்கி முல்கவ்கரை சந்தித்தார். இந்த ஜோடி 1992 இல் திருமணம் செய்து கொண்டது. நிக்கி கபீரை விட 20 வயது இளையவர். நிக்கி லண்டனில் வசித்து வந்தார், கபீர் இந்தியாவில் வசித்து வந்தார். இதனால், இருவருக்கும் இடையே தூரம் அதிகரித்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 2004ல் இருவரும் பிரிந்தனர்.
அதன்பிறகு லண்டனைச் சேர்ந்த இந்தியாவை பூர்விகமாக கொண்ட பர்வீன் துசாஞ்ச் மீது காதல் கொண்டார் கபீர். அவர் கபீரை விட 29 வயது இளையவர். 2016-ல் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். அப்போது கபீருக்கு வயது 70. தனது 70ஆவது வயதில் 4வது திருமணம் செய்துகொண்டார் கபீர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
