காதல் கணவனுக்காக கோடிகளைக் கொட்டி புதிய தொழில் தொடங்கும் நயன்தாரா
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிகள் பல கோடிகளுக்கு கேரளாவில் புதிய தொழில் தொடங்க இருக்கிறார்களாம்.
நயன்தாரா - விக்னேஷ்
சிவன் தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, இவர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் ஸ்டார் நடிகையாகவும் இருக்கிறார்.
நயன்தாரா 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு ஜுன் 9ஆம் திகதி திருமணமும் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.
மேலும், இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என வித்தியாசமான பெயரையும் வைத்திருக்கிறார்.
புதிய தொழிலில் நயன் - விக்கி
நடிகையாக இருந்து பல கோடிகளை சம்பாதித்த நயன்தாரா அந்தப் பணத்தை பல தொழிலில் இன்வஸ்ட் செய்திருக்கிறார். அதில் சென்னையிலும் கேரளாவிலும் சில இடங்களை வாங்கி ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் செய்து வருகிறார்.
அந்த இடங்களில் பிரதான நகரத்தில் எல்லா வசதிகளும் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை கட்டி அதனை விற்பனை செய்யலாம் என்று கணவன் ஐடியா கொடுத்திருக்கிறார்.
அதற்கு நயன்தாரா ஓகே சொல்ல இதற்கான பணிகளை ஆரம்பிக்க தீவிரம் காட்டி வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |