ஒரு வழியாக கனவை நினவாக்கிய கணவர்- 100 கோடி செலவில் இவ்வளவு பிரமாண்டமா? திகைப்பில் ரசிகர்கள்
நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருக்கும் வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நயன்தாராவின் கனவு
போயஸ் கார்டனில், வீடு வாங்க வேண்டும் என்பது பிரபலங்களின் கனவாக இருந்து வருகிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் நடிகை நயன்தாரா, போயஸ் கார்டனில் வீடு வாங்க கடந்த 10 வருடங்களாகவே முயன்றதாக கூறப்பட்டது.
பல வழிகளில் முயற்சி செய்து கடந்த சில வருடங்களுக்கு முன் மிகப்பெரிய தொகையை கொடுத்து, அங்கு ஒரு வீட்டை வாங்கியுள்ளார். 7000 சதுர அடியில், 100 கோடி செலவில் 3 தளங்களோடு கட்டப்பட்ட இந்த வீட்டில் கீழ் தளம் முழுவதும் கண்ணை கவரும் கலைநயம் மிகுந்த பொருட்களோடு ஒரு ஸ்டுடியோ போல் வடிவமைத்துள்ளார்.
சினிமாவில் நயன்தாரா எவ்வளவு பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் தம்பதிகள் இருவரும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
வீட்டை அருங்காட்சியகமாக மாற்றிய நயன்தாரா
இந்த நிலையில், விக்னேஷ் சிவன் அவருடைய வீட்டின் புகைப்படங்களை முதல் முறையாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவருக்குமே பழங்கால பொருட்கள், மற்றும் கலைநயம் மிகுந்த பொருட்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் அவர்களின் ஸ்டுடியோவில் ஏகப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
வீட்டின் தரை முதல், படிக்கட்டு, மாடியில் உள்ள தோட்டம், டெரசில் உள்ள ரூம், மோங்கில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பொம்பைகள், ஆளுயர தாழி உள்ளிட்டவைகளை பார்க்கும் பொழுது பார்க்க அரிதாக இருக்கும் அருங்காட்சியகம் போல் இருக்கிறது.
அத்துடன், பெரும்பாலும் மரங்களால் ஆன பொருள்களையே வீடு முழுவதும் வைத்திருக்கிறார்கள். அதே சமயம், வீட்டில் காற்றோட்டமாகவும் சூரிய வெளிச்சம் ஊடுருவி செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவற்றை போல் இரண்டாவது தளத்தில் குழந்தைகளுக்கான பிளே ஸ்டேஷன் போன்ற இடமும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திரைப்பட பணிகள் குறித்து பேசும் இடமும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள்,“இவ்வளவு அழகான வீடா?” என புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |