இஸ்லாமிய பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து நயன்தாராவை ஏமாற்றிய பிரபுதேவா: உண்மைகளை அம்பலமாக்கிய பிரபலம்!
பிரபுதேவாவின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டே போகிறார் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலா.
பிரபுதேவா
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா இந்திய சினிமாவில் இயக்குனர், நடிகர், நடன அமைப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.
இவரின் முதல் திரைப்படம் இந்து எனும் திரைப்படம் தான். அதில் தான் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு காதலன் என அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவர் சுமார்45 திரைப்படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.
சினிமாவில் என்னதான் உச்சத்தில் இருந்தாலும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது என்பது திரைத்துறையில் இல்லாமல் இல்லை அது போல இவரும் பல சர்ச்சைகளில் சிக்கியவர் தான்.
அதுமட்டுமல்லாமல் இவரும் தற்போது லேடி சூப்பர் ஸ்டாரா இருக்கும் நயன்தாராவும் பிரபுதேவாவும் காதலித்து பிறகு பிரிந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.
ரகசிய திருமணம்
இந்நிலையில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலா பேட்டி ஒன்றில் பிரபுதேவா பற்றி பல தகவல்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
அதில், பிரபுதேவாவை சினிமாவில் மட்டுமல்லாமல் வெளியிலும் பல பெண்கள் காதலித்துள்ளனர். ஆனால் அவர் தன்னுடைய டான்ஸ் குரூப்பில் இருந்த பெண் மீது காதல் மலர்ந்திருக்கிறது.
அவர் ஒரு இஸ்லாமியப் பெண். அவர் பெயர் ரமலத். இவர்களின் காதலுக்கு பிரபுதேவாவின் அப்பா எதிர்ப்பு தெரிவித்ததால் எல்லோரையும் எதிர்த்து ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார்.
இவ்வாறு திருமணம் செய்து திருமணம் செய்து 3 பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் அவரின் முதல் மகன் புற்று நோயால் இறந்ததால் ரம்லத் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெறுப்பில் தான் பிரபுதேவாவிற்கும் நயன்தாராவிற்கும் காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வசித்து வந்தார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கையில் கருத்து முரண்பாடு ஏற்பட நயன்தாராவிடம் இருந்து பிரிந்து தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை திருமணம் செய்துக் கொண்டாராம்.