நடிகர் மகேஷ்பாபு சினிமாவிற்கு வந்தது எப்படி தெரியுமா? பலரும் அறியாத உண்மை
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துக் கொண்டிருப்பவர் மகேஷ்பாபு. இவர் சினிமாவிற்கு எவ்வாறு வந்தார்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மகேஷ்பாபுவின் பிறப்பு
மகேஷ்பாபு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி சென்னையில் சிவராம கிருஷ்ணா மற்றும் திருமதி. இந்திரா தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
இவருக்கு ஒரு சகோதரனும் இருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம். மகேஷ்பாபு திரையுலகிற்கு சிறு வயதிலேயே தம் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகனார்.
இதனை தொடர்ந்து தனது 25ஆவது வயதில் “ராஜகுமாருடு”என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
சினிமாவிற்கு அறிமுகம்
இதனை தொடர்ந்து தெலுங்கில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவரது இளைய சகோதரர் ரமேஷ்பாபு, இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர்.
இவர் தம் இளமை பருவத்தையும் கல்லுாரி படிப்பையும் பாட்டியின் வீட்டில் இருந்த படியே முடித்துள்ளார் மற்றும் இவரது தந்தையான சிவராம கிருஷ்ணாவும் சினிமாவில் பெயர் பெற்ற நடிகர்.
இவரது தந்தையின் மூலம் சினிமாவிற்குள் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தையான சிவராம கிருஷ்ணாவின் சினிமா பயணம்
மகேஷ்பாபு தந்தையின் இயற்பெயர் கட்டமனேனி சிவராம கிருஷ்ண மூர்த்தி. இவர் மே மாதம் 31ஆம் திகதி 1943 பிறந்துள்ளார்.
இவர் முன்னாள் இந்திய நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், டாக்டர், அரசியல்வாதி என பல்கலை வித்துவானாக திகழ்ந்தவர்.
ஐந்து தசாப்தங்கள் நீடித்த திரைப்பட வாழ்க்கையில், அவர் 350 க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் 2009 ஆம் ஆண்டில், இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்திய அரசாங்கம் அவருக்கு பத்ம பூஷன் விருதையும் வழங்கியுள்ளது.
இவர் 1965 ஆம் ஆண்டு “தேனே மனசுலு” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதுடன் தெலுங்கில் இவர் 17 வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துள்ளார்.
மகேஷ் பாபுவின் திருமணம்
நடிகர் மகேஷ் பாபு, பிரபல பாலிவுட் நடிகை Namrata Shirodkar என்பவரை 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சமூக வலையத்தளங்களில் மனைவியின் பெருமையைப்பற்றி பதிவிடுவதை பழக்கமாகவும் வழக்கமாகவும் கொண்டுள்ளார்.
இவரது 15 ஆண்டுகள் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்தி வருகின்றதாகவும் வாழக்கையில் அனைத்தும் மனைவியின் மூலம் தெரிந்துக் கொண்டதாகவும் தெரிவித்து வருகிறார் மகேஷ் பாபு.