செம ஹொட் லுக்கில் நயன்தாரா... கணவர் போட்ட தெறி கமெண்ட் வைரல்!
நடிகை நயன்தாரா படு கிளாமரான லுக்கில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்துக்கு கணவர் விக்னேஷ் சிவன் நீ என் உலக அழகியே உன்னை போல் ஒருத்தி இல்லையே... என கமெண்ட் செய்துள்ளார்.
குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளதுடன் விக்னேஷ் சிவன் கமெண்டுட்டுக்கும் லைக்குகள் குவிந்து வருகினறது.

நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் நயன்தாரா. இவரை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது.
தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக வலம் வருகின்றார்.

20 வருடங்களுக்கும் மேல் சினிமா துறையில் தன்னை நாயகியாகவே தக்கவைத்துக்கொண்டுள்ள நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணமாகி, குழந்தைகள் பெற்ற பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பாலிவுட்டில் நயன்தாரா அறிமுகமாக ஜவான் திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததுடன் 1000 கோடிக்கு மேல் வசூல் வெறியாட்டம் ஆடியது.
தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா அறியப்படுகின்றார்.

சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், செம ஹொட் லுக்கில் நயன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு, இவரது காதல் கணவர் போட்டிடுள்ள கமெண்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |