நயன்தாரா 20 நாளுக்கு மட்டுமே இத்தனை கோடி சம்பளமா வாங்குகிறாரா? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த 2003 ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டாப் 10 வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
தமிழில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடி போட்ட இவர் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
தற்போது பிஸியாக நடித்து வரும் நயன்தாராவின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவரது சொத்து மதிப்பு சுமார் 22 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 165 கோடி எனக் கூறப்படுகிறது.

20 நாள் கால்ஷீட்டிற்கே 10 கோடி சம்பளமா?
20 நாள் கால்ஷீட்டிற்கே ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்குகிறார். இதன் மூலம் தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் ஒருவராக மாறியுள்ளார்.
அதேபோல பிராண்டு ஒப்பந்தங்களுக்காக சுமார் ஐந்து கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.
இவருக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் இரண்டு ஆடம்பர வீடுகள் மற்றும் சென்னைகள் 4 BHK வீடுகள், கேரளாவில் உள்ள அவரது பெற்றோர் வீடுகள் உட்பட இந்தியா முழுவதும் பல குடியிருப்புகளை சொந்தமாக வைத்திருக்கிறார்.
ஹைதராபாத் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றுக்கும் சுமார் 15 கோடி ரூபாய் செலவாகும் என்றும் இவை தெலுங்கு திரையுலகில் ஏ லிஸ்ட் பிரபலங்கள் வசிக்கும் பஞ்சாரா ஹெல்ஸில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதோடு அவரது இரண்டு சென்னை வீடுகளில் ஒவ்வொன்றும் நூறு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. நயன்தாரா சமீபத்தில் ஒரு தனியார் ஜெட் ஒன்றையும் வாங்கியுள்ளார்.

அது முக்கியமாக அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அடிக்கடி சென்னை மற்றும் ஹைதராபாத் மற்றும் சென்னை - கொச்சி பயணங்கள் மேற்கொள்வதற்காகவும் வாங்கியுள்ளார்.
சொகுசு கார்களை பொறுத்த வரை ரூபாய் 74.50 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 5 சீரிஸ். ரூ. 88 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் ஜிஎல்எஸ்350 டி, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, ஃபோர்டு எண்டெவர் மற்றும் பிஎம்டபிள்யூ 71 சீரிஸ் வைத்துள்ளார் என கூறப்படுகிறது.