தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்: 3 விருதுகளை தனதாக்கிய நயன்தாரா! நெகிழ்சியான பதிவு
தமிழக அரசின் 2016-2022 திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை தன்வசப்படுத்திக்கொண்ட நயன்தாரா நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர் தனது அதாத்திய நடிப்புத் திறமையால், தற்போது பாலிவுட் வரையில் கொடிக்கட்டி பறக்கின்றார்.

சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை தக்கவைத்து வருகின்றார்.
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்.

ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் இவர் தென்னிந்திய நடிகைகளுள் உச்ச இடத்தை பிடித்துள்ளார். நயன்தாரா காஸ்மெடிக்ஸ் பிராண்ட் ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகின்றார்.

அதுமட்டுமன்றி ரவுடி பிச்சர்ஸ் என தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகின்றார். சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதற்கும் தவறுவது கிடையாது.

இந்நிலையில், தமிழக அரசின் 2016-2022 திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை தன்வசப்படுத்திக்கொண்ட நயன்தாரா நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

'அறம்' (2017) படத்திற்காக சிறந்த நடிகை விருதை நயன்தாரா பெற்றுள்ளார். மேலும், அவர் தயாரித்த 'கூழாங்கல்' மற்றும் 'நெற்றிக்கண்'ஆகிய படங்களுக்கும் விருதுகள் கிடைத்துள்ளன, இது அவரது தயாரிப்பு நிறுவனமான 'The Rowdy Pictures' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |