இதுவரையில் கேப்டனை நேரில் சென்று பார்க்காத நயன்.. என்ன காரணம்- விளாசும் ரசிகர்கள்
இதுவரையில் நடிகை நயன்தாரா கேப்டனை ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை? என ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்துள்ளது.
அறிமுகம்
தமிழ் சினிமாவில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் சினிமாவிற்குள் வந்த பின்னர் பல போராட்டங்கள், தனிமனித தாக்குதல்களை சந்தித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
மேலும் கோலிவுட்டிற்குள் அடியெடுத்து வைத்த நயன்தாரா ஆரம்பத்தில் கிளாமருக்காக மட்டுமே திரையுலகத்தால் பயன்படுத்தப்பட்டார்.
இதனை தொடர்ந்து திரையுலகில் முட்டி மோதி தன்னுடைய திறமையை காண்பிக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்.
இதன்படி, நானும் ரௌடி தான் மற்றும் அறம் ஆகிய இரண்டு படங்களும் நயனுக்கு வெற்றி தேடி கொடுத்தது.
இந்த படங்களை தொடர்ந்து நயனின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இதற்கு பின்னர் தான் நயன்தாரா “லேடி சூப்பர் ஸ்டார்” என்ற அடைமொழிக்கு சொந்தமானார்.
திருமணம்
இந்த நிலையில் நானும் ரௌடி தான் படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி கொஞ்ச நாட்களில் வாடகை தாய் மூலம் அழகிய இரண்டு குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார்.
திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டாலே நடிப்புக்கு மூட்டை கட்டும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாரா தொடர்ந்து நடித்து வருகிறார்.
விமர்சனம்
இப்படி புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா, நேற்றைய தினம் “கலைஞர் 100 விழா” தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்ட விழாவில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் இவர் மட்டுமல்லாது ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலைஞர் நிகழ்வில் கலந்து கொண்ட நயன்தாரா, கேப்டனுக்கு இதுவரையில் அஞ்சலி செலுத்தவில்லை. மாறாக அவரின் நினைவிடத்திற்கும் செல்லவில்லை என ரசிகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் சினிமாவில் இருக்கும் பல முன்னணி பிரபலங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் கேப்டனுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். ஆனால் நயன்தாரா இதுவரையில் பார்க்க செல்லாத விஷயம் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |