கமல்ஹாசன், எஸ்பிபி-யுடன் நடித்த இந்த குழந்தையை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க
நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த குழந்தை நடிகையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை நீனா
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் தான் நடிகை நீனா.
ஆனால் இதற்கு முன்பு தனது இரண்டு வயதில் அபூர்வ சகோதரி படத்தில் நடித்திருந்தார். பின்பு தெலுங்கு படமான கீதாஞ்சலி படத்தில் நாகர்ஜுனாவுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் எஸ்பி பாலசுப்பிரமணியன் மகளாக கேளடி கண்மணி படத்தில் தனது அழகான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.
கற்பூர பொம்மை ஒன்று இந்த பாடலைக் கேட்டால் நமது நினைவிற்கு முதலில் வருவது நடிகை நீனா தான். பின்பு பல படங்களில் நடித்த இவர் கடைசியாக 2000ம் ஆண்டு புரட்சிக்காரன் என்ற படத்தில் நடித்தார்.
சினிமாவிலிருந்து விலகல்
சித்தி, அண்ணாலை போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரை பிரபலமான இவர் 2004ம் ஆண்டு செந்தில்குமார் என்பரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவருக்கு 44 வயதாகும் நிலையில், ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

சமீபத்தில் இவரது பேட்டி ஒன்று வெளியாகியது. இதனை அவதானித்த ரசிகர்கள், குழந்தை நட்சத்திரமாக இருந்த நீனாவா இது என்று ஆச்சரியத்துடன் அவதானித்து வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |