நவராத்திரி: 9 நாட்கள் இறைவனுக்கு படைக்கும் உணவுவகைகள் என்னென்ன? முழுவிபரம் இதோ
இந்திய மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் விழாவான நவராத்ரி விழா நேற்றைய தினம் ஆரம்பித்துள்ளது.
இந்த ஆண்டில் நவராத்திரி அக்டோபர் 7ம் திகதி தொடங்கி 15 மற்றும் 16ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி அன்று முடிவடைகின்றது.
நான்கு விதமாக கொண்டாடப்படும் நவராத்திரி
சாரதா நவராத்திரி அல்லது மகா நவராத்திரி (புரட்டாசி மாதம்)
வசந்த நவராத்திரி (பங்குனி மாதம்)
ஆஷாட நவராத்திரி ( ஆனி மாதம்)
சியாமளா நவராத்திரி (தை மாதம்)
இதில் ஆஷாட மற்றும் மகா நவராத்திரியை குப்த நவராத்திரி என்றும் அழைக்கின்றனர். இந்த நவராத்திரியை தாந்திரகவாதிகள் தங்கள் சக்தியை அதிகரிக்க எடுக்கின்றனர்.
நவராத்திரி உணவு வகைகள்
முதல் நாள்: வெண் பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை போன்ற உணவுகளை படைப்பார்கள்.
இரண்டாம் நாள்: புளியோதரை, எள் பாயாசம், தயிர் வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம் போன்ற உணவுகளை படைப்பார்கள்.
மூன்றாம் நாள்: கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்
நான்காம் நாள்: தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல் போன்ற உணவுகளை படைத்து மகிழ்வார்கள்.
ஐந்தாம் நாள்: சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல் போன்ற உணவுகளை இறைவனுக்கு படைப்பார்கள்.
ஆறாம் நாள்: தேங்காய் சாதம், தேங்காய் பால் பாயாசம், ஆரஞ்சு பழம், மாதுளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம் போன்ற உணவுகளை படைப்பார்கள்.
ஏழாம் நாள்: எலுமிச்சை சாதம், பழ வகைகள், வெண் பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு போன்ற உணவுகளை படைக்கின்றனர்.
எட்டாம் நாள்: பால் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல் படைக்கலாம்.
ஒன்பதாம் நாள்: சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக் கடலை, எள் உருண்டை போன்ற உணவுகளை படைப்பார்கள்.