நவராத்திரி 7ம் நாள்: எந்த தெய்வத்தை வணங்குவது? இன்று மேஷம் ராசிக்கு எதை தொட்டாலும் வெற்றி
மங்களகரமான பிலவ வருடம் புரட்டாசி மாதம் 27 தேதியான இன்று 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
நவராத்திரி ஏழாம் நாள்
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, அக்டோபர் மாதம் 7 அன்று தொடங்கியது. இந்த பண்டிகை வரும் 15 அதாவது விஜய தசமி அன்று நிறைவு பெறுகிறது.
நவராத்தியில் நாம் பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். அத்துடன் அம்மனுக்கு மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் படைக்க வேண்டும்.
நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள் உகந்தவை.
நவராத்திரியின் ஏழாவது நாளான இன்று துர்க்கையின் ஏழாவது வடிவமான காளராத்திரி வழிபாடும் முக்கியமானது என்பர். வெள்ளைத் தாமரை மீது அமர்ந்து ஞானத்தை கல்வியை கலைகளை அள்ளி வழங்கும் கலைமகளை சாரதா தேவியாக சாம்பவி அன்னையாக போற்றும் நாள் இன்று. சப்தமி என்பதாலும் ஏழாம் நாள் துர்கையாக காளராத்திரி தேவியையும் இந்த நாளில் வழிபடுவது உண்டு.