முழங்காலில் இருக்கும் கருமை அழகை கெடுக்கிறதா? உடனே போக்க சிறந்த வழி இதோ...!
அழகை பாதுகாப்பதில் பெண்கள் அதீக கவனம் செலுத்துவதுண்டு. அப்படி பேணி பேணி பாதுகாக்கும் அழகில் சின்னதாக ஒரு கருமை பருவோ அல்லது எதாவது ஒன்றோ சேர்ந்து விட்டால் அதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
அப்படித்தான் முழங்கால்களில் இருக்கும் கருமையை போக்க பல வழிகளில் முயற்சித்துப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவை எல்லாம் தோல்வியில் முடித்திந்திருக்கும் அதனால் இப்போது உங்களுக்கு முழங்கால்களை அழகாக்க சிறந்த தீர்வு இதோ,
கருமையை போக்க
ஒரு சிறிய பாத்திரத்தில் 1 மேசைக்கரண்டி தக்காளி சாறு, 1 மேசைக்கரண்டி தயிர் மற்றும் 2 மேசை கரண்டி ஓட்ஸ் பொடி சேர்த்து நன்கு பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு முழங்கை மற்றும் முழங்காலில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
அல்லது மஞ்சள், பால், தேன் இவை அனைத்தும் சரும கருமையைப் போக்கும். இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள பகுதியில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து, பின் நீரால் கழுவினால் கருமை இல்லாமல் போகும்.
இவற்றை முழங்கால்களில் மட்டுமல்ல கைகளில் இருக்கும் கருமைகளையும் நீக்கும்.