இளநரை ஒரு வாரத்தில் கருப்பாகணுமா? இந்த ஐந்து பொருள் இருந்தா போதும்
இளநரை
இளநரை என்பது தற்போது வயது வித்தியாசமின்றி பலரை பாதிக்கும் பொதுவான பிரச்னையாகி விட்டது. இதற்கிடையே, இளநரை ஒரு காலத்தில் 20-30 வயதினரிடையே அதிகம் காணப்பட்டதாயினும், இப்போது 18 வயதிலேயே இது ஏற்பட தொடங்கிவிட்டதாக சித்த மருத்துவர் டாக்டர் ராஜலெட்சுமி தெரிவித்துள்ளார்.
தலைமுடிக்கு இயற்கையான நிறம் அளிக்கின்றது கெராட்டின் பிக்மென்ட் என்பதையும், அதன் குறைவே நரைமுடிக்கு காரணமாக இருப்பதாகவும் அவர் விளக்கினார்.
அதுமட்டுமன்றி இதை சில பொருட்கள் கொண்டு சரிசெய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இளநரை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதில் முக்கியமானது வைட்டமின் B12, காப்பர் (செம்புச்சத்து), மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்களின் குறைபாடுகள், நரைமுடிக்கு வழிவகுக்கின்றன. இதற்காக வெள்ளை மிளகு, நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்சள், வேப்பம் பட்டை, கடுக்காய் பொடி, இருந்தால் போதும்.
பொருட்கள்
முதலில் ஒரு பங்கு மூலிகைப்பொடிக்கு, ஒரு பங்கு வெள்ளை கரிசலாங்கண்ணி இலைச் சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இலைச்சாற்றை குறைந்த நீரில் அரைத்து பிழிந்து வடிகட்டி, மூலிகைப்பொடியில் சேர்க்க வேண்டும்.
இந்தக் கலவையை அகன்ற வாய் கொண்ட மண்பானையில் ஊற்றி, பகலில் வெயிலில் வைக்கவும். இரவில் பனி, மழைத் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வீட்டுக்குள் கொண்டு வரவும்.
இந்த செயல்முறை, கலவை முழுவதும் உலர்ந்து வெடிப்பு ஏற்படும் வரை தொடர வேண்டும். பின்னர், உலர்ந்த கலவையை மிக்ஸியில் மென்மையாக அரைத்து, சலித்து எடுக்க வேண்டும்.
இதை நரைத்த முடியின் மீது தடவவும். பிறகு ஒரு ஹேர்கேப் அணிந்து 2 மணி நேரம் ஊறவிடவும். 2 மணி நேரம் கழித்து தலையை நன்கு அலசவும்.
பசையைப் பயன்படுத்திய அன்று இரவு, தலைக்கு ஒரு சிறப்பு எண்ணெய் தடவ வேண்டும். இப்படி செய்தால் கட்டாயம் ஒரு வாரத்தில் நரைமுடி மறைந்து போகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |