உங்களுக்கு சிறுநீரக கற் பிரச்சினையா? விரைவில் கரைக்கும் எளிய பானம்!
பொதுவாகவே இப்போதுள்ளவர்களுக்கு வயது வித்தியாசம் பார்க்காமல் அனைத்து வியாதிகளுக்கும் பாதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் சிறுநீரகக் கல் பிரச்சினையும் அவ்வாறே. சிறுநீரில் அதிகமான யூரிக் அமிலம் இருந்தாலோ அல்லது கல் உருவாவதைத் தடுக்கும் காரணிகளான சிட்ரேட் ஆகியவை குறைவாக இருப்பதாலும் சிறுநீரகக் கல் உருவாகிறது.
ஒரு சிலருக்கு அதிகமான கல்சியம் இருப்பது மரபு வழியாக ஏற்படும். அது போலவே உணவுப் பழக்கம் தண்ணீர் குறைவாகக் குடிப்பதாலும் சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்படும். சிறுநீரக கற்கள் என்பது கல்சியம் மற்றும் உப்பு போன்ற தாதுக்களால் ஆன சிறிய படிவுகள் ஆகும்.
இந்த தாதுக்கள் மற்றும் உப்புகள் காலப்போக்கில் சிறுநீரகத்தின் சுவர்களில் உருவாகி நாளடைவில் அவை சிறுநீரகக் கற்களாக மாற்றமடையும்.
சிறுநீரக கற் பிரச்சினைக்கு தீர்வு
இந்த சிறுநீரக கற் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த இயற்கை பானம் ஒன்றுதான் இது, ஓரு மிக்ஸி ஜாரில் 1 கப் தேங்காய் தண்ணீர், எலுமிச்சை அரைப்பழம், வெள்ளரிக்காய் தோல் சீவியது, மற்றும் இஞ்சி, புதினா சிறிதளவு என்பவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதை நன்றாக வடித்து எடுத்து தேவைப்பட்டால் புதினா இலை, எலுமிச்சை, ஐஸ் கட்டிகள் என்பவற்றை சேர்த்து தினமும் குடிக்கலாம்.
மேலும், இதனை குடிக்கும் போது மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிக முக்கியம் ஏனெனில் சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |