சிறுநீரகக் கல் உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிடலாம்
பொதுவாகவே இப்போதுள்ளவர்களுக்கு வயது வித்தியாசம் பார்க்காமல் அனைத்து வியாதிகளுக்கும் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் சிறுநீரகக் கல் பிரச்சினையும் அவ்வாறே.
சிறுநீரகக்கல்
சிறுநீரில் அதிகமான யூரிக் அமிலம் இருந்தாலோ அல்லது கல் உருவாவதைத் தடுக்கும் காரணிகளான சிட்ரேட் ஆகியவை குறைவாக இருப்பதாலும் சிறுநீரகக் கல் உருவாகிறது.
ஒரு சிலருக்கு அதிகமான கல்சியம் இருப்பது மரபு வழியாக ஏற்படும். அது போலவே உணவுப் பழக்கம் தண்ணீர் குறைவாகக் குடிப்பதாலும் சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்படும்.
நோய் வராமல் தடுக்க
புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு வெள்ளரிக்காய் போன்ற அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்கள் சாப்பிட வேண்டும். சிறுநீரகக் பிரச்சினைகள் உள்ளவர்கள் வாழைத்தண்டு சாறு குடிப்பதால அந்நோய் வராமல் தடுக்கலாம்.
அதிகமான திரவ உணவுகளை உண்ணுவதால் சிறுநீரக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிவிடும்.
அதிகமாக இளநீர் மற்றும் நீர் அருந்த வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை
அதிக மசாலா உணவுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நண்டு, மீன், இறால், முட்டை வெள்ளைக் கரு, பால் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஐஸ்கிரீம், சாக்லெட், கோப்பி, தேநீர், குளிர்ப்பானங்கள் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.