பசை போல் ஒட்டும் நறுவிலி பழம்! சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக பழங்கள் எனக்கூறும் போது வாழைப்பழம், மாம்பழம், ஆகிய பழங்களை தான் அதிகமாக எடுத்து கொள்வோம்.
இவற்றையெல்லாம் தாண்டி அதிக சத்துக்கள் நிறைந்த பழங்கள் இருக்கின்றன.
அந்த வகையில் க்ளூ பெர்ரி எனப்படும் “நறுவிலி பழம்” பசை போன்று அமைப்பில் காணப்படும்.
இதனை சாப்பிடுவதால் மனித உடம்பில் ஏகப்பட்ட நோய்கள் குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
க்ளூ பெர்ரி மரம் வளமான மண்ணில் நன்கு வளரக்கூடியது. இது பார்ப்பதற்கு 40 அடி முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்திருக்கும்.
அப்படி என்ன தான் சிறப்புக்கள் இருக்கின்றது என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
நறுவிலி பழத்தின் நன்மைகள்
1. நோய்கள் அடிக்கடி வராமல் இரத்தத்தை சுத்திகரித்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும்.
2. குரல் கம்மல், வயிற்றுக் கடுப்பு ஆகிய பிரச்சினைகளிலிருந்து எம்மை பாதுகாக்கும். அத்துடன் குடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கும்.
3. அதிகமான மருந்துவில்லைகள் சாப்பிடுபவர்கள் காலப்போக்கில் மருந்தினால் ஏகப்பட்ட பக்க விளைவுகளை சந்திப்பார்கள். இதனை தடுத்து உடல் ஆரோக்கியத்தை பேணும்.
4.பேரீச்சம் பழத்துடன் நறுவிலி பழத்தை அரைத்து முகத்தில் பூசி வந்தால் சரும பிரச்சினைகள் நீங்கும்.
5. பொதுவாக மனிதர்களின் வயிற்றில் ஏகப்பட்ட புழுக்கள் காணப்படும் இதிலிருந்து வெளியேற மருந்துவில்லைகள் குடிப்பதை விட உடலுக்கு குளிர்ச்சியை தந்து புழுக்களை இந்த பழம் வெளியேற்றும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |