பிறவியிலேயே சைக்கோ குணம் கொண்டவர்களாம்: இந்த 3 ராசிகளிடம் ஜாக்கிரதை
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே வினோதமானபழக்கங்களை கொண்டிருப்பார்கள். இவர்களின் மனநிலை மணிக்கொரு முறை மாறிக்கொண்டே இருக்கும்.
அப்படி பிறப்பிலேயே யாராலும் புரிந்துக்கொள்ள முடியாத சைக்கோ குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் வலுவான தலைமைத்துவ குணங்களுக்கும், மனவலிமைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
ஆனால் அவர்களின் தீவிரமான உணர்ச்சிவசப்படும் குணம் சில சமயங்களில் அவர்களின் சைக்கித்தனமான பண்புகளை வெளிப்படுத்துகின்றது.
இவர்கள் தங்கள் இலக்குகளை அடைந்துக்கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிடிவாதம் மற்றும் இலக்கு மீதான ஆர்வம் அதிகரிக்கும் போது சைக்கோ போல் மாறிவிடுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே சிக்கலான இரட்டை ஆளுமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் தங்களின் இயல்பை சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் உண்மையான குணம் என்ன என்பதை நெருங்கியவர்களாலும் கணிக்கவே முடியாது.
இவர்களின் தகவமைப்புத் திறன் பல சந்தர்ப்பங்களில் சுயநலமான செயல்பாடுகளுக்கும், சைக்கோத்தனமான செயல்பாடுகளில் ஈடுபடவும் காரணமான அமைந்துவிடும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் அனைவரும் தங்களை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இயல்பாகவே கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள், கவர்ச்சிகரமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக எதையும் செய்ய தயாராகிவிடுவதால், சில சமயம் சைக்கோ போல் தோன்றுவர்கள்.
தேவை மற்றும் தனிப்பட்ட லாபத்திற்காக மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் குணம் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். இதுவும் இவர்கள் சைக்கோ குணத்தை அவ்வப்போது வெளிப்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |