நட்சத்திரா கழுத்தில் புது தாலி! அவசர அவசரமாக நடந்து முடிந்த திருமணம் - இப்படி ஒரு காரணமா ?
நடிகை நட்சத்திராவிற்கும் விஸ்வா என்பவருக்கும் திடீர் திருமணம் நடைபெற்று இருக்கிறது.
தாலியுடன் நட்சத்திரா இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடர் மூலம் நட்சத்திரா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
தற்போது வள்ளி திருமணம் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவரின் திருமண பேச்சுக்கள் அடிப்பட்டு வந்த நிலையில் ஆடம்பரம் இல்லாமல் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திடீர் திருமணத்திற்கான காரணம்
நட்சத்திராவைத் தூக்கி வளர்த்த தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார்.
பள்ளிப் படிப்பு வரை நட்சத்திரா தாத்தாவின் வீட்டிலிருந்தே வளர்ந்தவர். தாத்தாவின் ஒரே ஆசை நட்சத்திராவை மாலையும் கழுத்துமாகப் பார்த்து விட வேண்டும் என்பதுதான்.
அதனால தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக குடும்பக் கோயிலில் வைத்து வீட்டுப் பெரியவர்கள் முன்னிலையில் நட்சத்திரா – விஷ்வா திருமணம் நடந்து முடிந்தாக கூறப்படுகிறது.
இது குறித்த புகைப்படங்கள் வைரலானதில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
