திருமண கொண்டாட்டத்தில் குழந்தைகளுடன் ஜோதிகா! அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை நக்மா
நடிகை ஜோதிகா, தனது அக்கா நக்மாவுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகா தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி திரையுலகிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர்.
1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி திரைப்படமான டோலி சாஜா கே ரக்னா மூலம் இந்தியில் பிரபலமான ஜோதிகா, பின்பு தமிழில் வாலி படத்தின் மூலம் பிரபலமானார்.
மலையாளத்தில் தி கோர் என்ற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக கதாநாயகியாக ஜோதிகா நடிக்கிறார். இவரைப் போன்றே இவரது அக்கா நக்மா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நக்மா நடித்துள்ளார். பின்பு அரசியலில் களமிறங்கியவர் நடிப்பின் பக்கம் வரவே இல்லை.
திருமண கொண்டாட்டத்தில் நக்மா
இந்நிலையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நக்மா தமது சகோதரி ஜோதிகாவுடன் குடும்ப திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜோதிகாவின் குழந்தைகள், ஜோதிகா, மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களையும் நக்மா வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படத்தில் நக்மா அடையாளம் தெரியாமல் ஆளே மாறியுள்ளதையடுத்து, ரசிகர்களால் குறித்த புகைப்படம் வைரலாக்கப்பட்டு வருகின்றது.