கடும் கோபத்தில் மாமனார் நாகர்ஜுனா? நாக சைதன்யா, சமந்தா விவாகரத்து உறுதியா? என்ன நடந்தது தெரியுமா?
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான நாகர்ஜுனா ஆகஸ்ட் 29ம் தேதி தன் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.
நாகர்ஜுனாவுக்கு மகன் நாக சைதன்யா, மருமகள் சமந்தா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்தார்கள்.
அதில் நாக சைதன்யா, காஜல் அகர்வால், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரின் ட்வீட்டுகளுக்கு நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ளார் நாகர்ஜுனா.
மருமகள் சமந்தாவின் ட்வீட்டுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. அதை பார்த்தவர்களோ, அப்படி என்றால் நாக சைதன்யாவும், சமந்தாவும் விவாகரத்து பெறப் போவது உண்மை தான் போன்று என்கிறார்கள்.
நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் விவாகரத்து பெறுவது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
இதை தொடர்ந்து நாக சைதன்யா சமந்தாவை பிரிந்து தன் அப்பா வீட்டிற்கு சென்றுவிட்டார் என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
நாக சைதன்யா, சமந்தா இடையேயான பிரச்சனையை தீர்த்து வைக்க நாகர்ஜுனா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அது தோல்வி அடைந்ததாகவும் தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்தன.
அந்த கோபத்தில் தான் அவர் சமந்தாவின் ட்வீட்டுக்கு பதில் அளிக்கவில்லை என்று பேசப்படுகிறது.