நாக சைதன்யா- சோபிதா திருமண பரிசு தயார்- விலை மட்டும் இத்தனை கோடியா?
நாக சைதன்யா - சோபிதா திருமண பரிசை நாகர்ஜுனா தயார் செய்து விட்டதாக புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நாக சைதன்யா- சோபிதா திருமணம்
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்த இருவரும் சில வருடங்களுக்கு முன்னர் அவர்களின் விவாகரத்து செய்தியை அறிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக மீண்டும் நாக சைதன்யா அறிவித்திருந்தார்.
இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்னும் சில நாட்களில் திருமணம் வெகு விமர்சையாக நடக்கவுள்ளது.
தற்போது திருமண ஏற்பாடுகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. சில தினங்களுக்கு முன்புகூட சோபிதாவிற்கு மஞ்சள் பூசி நலங்கு வைத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
திருமண பரிசு
இந்த நிலையில், நாக சைதன்யா- சோபிதா திருமணத்திற்கான பரிசை முன்னரே தயார் செய்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது, நாகர்ஜுனா சமீபத்தில், லெக்சாஸ் எல்.எம். எம்.பி.வி ரக காரை வாங்கியுள்ளார். இந்தக் காரின் உற்பத்தி விலை ரூபாய் 2 கோடியே 15 லட்சம், பதிவு வரிகள் அனைத்தும் சேர்த்து காரின் மொத்த விலை ரூபாய் 2 கோடியே 50 லட்சம் எனக் கூறப்படுகின்றது.
இவ்வளவு அவசரமாக காரை வாங்கி தனது மகன் மற்றும் மருமகளுக்கு திருமண பரிசாக கொடுக்கப் போகிறார் எனவும் சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகின்றனர்.
குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரலவாக பேசப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |