வேலை பார்க்குற மாதிரி நடிக்குறாங்க.. மஞ்சரி குறி வைக்கும் Housemates- குழம்பத்தில் முத்து
பிக்பாஸ் வீட்டில் இன்றைய தினம் மஞ்சரியை தாக்கி குறிப்பிட்ட சில போட்டியாளர்கள் பேசி வருகிறார்கள்.
பிக்பாஸ்
பிரபல டிவியின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 கடந்த மாதம் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் போட்டியாளராக எலிமினேட் செய்யப்பட்டு, மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ- என்றி கொடுத்தார்.
வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர்களாவது பிக்பாஸ் வீட்டினை சுவாரசியமாக மாற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர்கள் நிகழ்ச்சியை இன்னும் சொதப்பி வருவதாக கூறப்படுகின்றது. பிக்பாஸ் மீது மக்கள் மத்தியில் இருந்த விருப்பத்தை தற்போது இருப்பவர்கள் இல்லாமல் செய்து வருகிறார்கள்.
மஞ்சரியை தாக்கும் பெண் அணியினர்
இந்த நிலையில், இன்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் மஞ்சரி மற்றும் முத்து பற்றி விமர்சித்துள்ளனர்.
மஞ்சரி வீட்டில் வேலை செய்யாமல் அமர்ந்து கொண்டு இருப்பதாகவும், அவர் சில சமயங்களில் முத்துவின் சாயலாகவும் இருக்கிறார் என்றும் பவித்திரா கூறியுள்ளார்.
அத்துடன் தர்ஷிகா “பிக்பாஸ் வீட்டில் ராணவ் வேலை செய்யாமல் வேலை செய்வது போன்று நடிக்கிறார்..” என்று கூறியுள்ளார்.
இப்படியாக இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |