நடிகர் சங்க தேர்தல் : கார்த்தி விஷால் அணி மீண்டும் வெற்றி
நடிகர் சங்க தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை மூன்று ஆண்டுக்கு பின் இன்று மார்ச் 20-ல் சென்னையில் நடந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.
ஆனால், அப்போது தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை செல்லாது என்ற அறிவித்த நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன.
2வது முறையாக வெற்றி
பின்னர், தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ணவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஏழுமலை என்ற துணை நடிகர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த இந்த ஓட்டு எண்ணிக்கையில், இதனிடையில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றுள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
சுவாமி சங்கரதாஸ் அணியின் ஐசரி கணேஷைவிட 688 வாக்குகள் அதிகமாக பெற்று விஷால் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் 1,612 வாக்குகளும், கருணாஸ் 1,605 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.