நடிகர் கமல்ஹாசன் மீது நடுரோட்டில் தாக்குதல் நடத்திய மர்மநபர்! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
நடிகர் கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான கோபிநாத்தை ஆதரித்து பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். இதனையடுத்து, பரப்புரை முடித்துகொண்டும் கிளம்பும் நேரத்தில் வாலிபர் ஒருவர் திடீரென காரை வழிமறித்துள்ளார். அதன்பின்னர், அவரை விலக்கியும், நகராமல் கமல்ஹாசன் கார் மீது ஏறி முன் பக்க கண்ணாடியை உடைத்துள்ளார்.
பின் பவுன்சர்கள் அந்த நபரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். உடனே கமல்ஹாசன் தனது ஓட்டல் அறைக்கு கிளம்பி சென்றார். இதைப்பார்த்த மநீம தொண்டர்களும் பொதுமக்களும் சேர்ந்து தாக்குதல் நடத்திய நபரை பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும், இதில் படுகாயமடைந்த அந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.